Tourist Places

இரஞ்சன்குடிகோட்டை

ரஞ்சன்குடிகோட்டை பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஒரு அழகிய சிறிய கோட்டையாகும். கி.பி 17ஆம் நூற்றாண்டில் கர்னாடக (ஆற்காடு) நவாப் வழி வந்த ஜகின்தார் என்பவரால் கட்டப்பட்டது. தற்பொது இந்திய தொல்பொருள் அளவை கழகத்தின் பராமரிப்பில் உள்ளது. கி.பி 1751 ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கும்(முகமது அலி உதவியுடன்) பிரஞ்சு படையினருக்கும்(சந்தா சாகிப் உதவியுடன்) இடையே போர் நடைபெற்ற இடம்.

சாத்தனூர் கல்மரம்

பல கோடி ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தற் போதுள்ள நிலப்பரப்பில் சில பகுதிகள் கடல்கொள்ளப்பட்டு அவை பூமிக்கடியில் புதையுண் டன. ஆயிரக்கணக்கான ஆண்டு கள் கழித்து மீண்டும் கடல் உள் வாங்கியதால் அந்த நிலப்பரப்புகள் வெளியில் வந்தன.

நிலப்பரப்புகள் கடலுக்கடியில் புதைந்தபோது அதிலிருந்த உயிரி களும் மண்ணுக்குள் புதைந்தன. அந்தப் பகுதியில் மீண்டும் நிலப்பரப்புகள் உருவானபோது, அவைகளின் எச்சங்கள் நிலக்கரி யாகவும் கச்சா எண்ணெய்யாகவும் நமக்கு கிடைத்தன. பூக்காத தாவர வகைகள் அதிகப்படியான அழுத்தம் மற்றும் வெப்பம் காரணமாக கற்களாக உருமாறின. இவைதான் கல்மரங்கள்.

பெரம்பலூர் மாவட்டம் சாத்த னூரில் 18 மீட்டர் நீளம் கொண்ட கல்மரம் ஒன்று 1950-ல் புவியி யல் துறையால் அடையாளம் காணப்பட்டது.

மயிலூற்று அருவி

பெரம்பலூரில் இருந்து 17 கி.மீ. தொலைவில் லாடபுரம் கிராமம். இங்குள்ள மயிலூற்று அருவியில், அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான 5 மாதங்களில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் இந்த அருவியின் அழகை கண்டு ரசிக்கவும், குளித்து மகிழவும் பெரம்பலூர் மாவட்டம் மட்டுமன்றி சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

Premium Ads