History of Perambalur

பெரும்புலியூர் என்பது பெரம்பலூர் என்பதாக பெயரெடுத்தது. முற்காலத்தில் பெரம்பலூர், பெரும் வனப்பகுதியாக இருந்துள்ளது. 1970 வரை வேட்டை பிரியர்கள் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் இங்குதான் வருவார்கள். புகழ் பெற்ற பச்சைமலை இங்கிருந்து தான் ஆரம்பம் ஆகிறது.

பஞ்சபாண்டவர்கள் தங்களுடைய அஞ்ஞாத வாச காலத்தில் அருகிலுள்ள லாடபுரம்(விராடபுரம்) கிராமத்தில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள மலையில் வசித்தனர். அதற்கான அடையாளங்கள் இன்றும் அங்கே உள்ளன. அவர்கள் ஸ்ரீ மதனகோபால சுவாமி கோவிலுக்கு தினந்தோறும் வந்து இறைவனை வழிபட்டனர். கோவிலில் அவர்கள் நட்டு வைத்த நந்தியாவட்டை செடி பல்லாயிரக்கணக்கான வருடங்களாக இன்றும் பசுமையாக உள்ளது அதிசயம் தான். மேலும் அந்தச் செடி கண் நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. பஞ்ச பாணடவர்கள் பெரம்பலூர் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் தங்களுடைய குலதெய்வமான ஸ்ரீ காசி விஸ்வநாதர் விக்ரகத்தை அவர்களே பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகவும் வரலாறு உண்டு.

பெரம்பலூர் ஏரிக்கு நீர் வரத்திற்காக வெள்ளையர்கள் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட ஜார்ஜ் வாய்க்கால் இன்று பராமரிப்பின்றி பெரும் பகுதி அழிந்து கொண்யட வருகிறது. புகழ்பெற்ற ஸ்ரீ நீலியம்மன், ஸ்ரீ வெள்ளந்தாங்கி அம்மன் கோவில் இங்கு உள்ளது. இங்கு ஐந்து கலை கல்லூரிகள், ஏழு பாலிடெக்னிக் கல்லூரிகள், ஏழு பொறியியல் கல்லூரிகள், இரண்டு தொழில் நுட்ப பயிற்சி நிறுவனங்கள் மற்றும் விவசாயம், செவிலியர், முடநீக்கியல், கல்வியியல் கல்லூரிகளும் மற்றும் மருத்துவக் கல்லூரியும் இப்பகுதியில் நடைபெற்று வருகின்றன.

பெரம்பலூர் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஒன்றாகும். பெரம்பலூர் மாவட்டம், 1995-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி திருச்சிராப்பள்ளிமாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது. இம்மாவட்டம் 322 சதுர கி.மீ பரப்பளவுடையது.

பெரம்பலூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, தமிழகத்தின் 31-வது மாவட்டமாக அரியலூர் மாவட்டம் நவம்பர் 23, 2007 ல் உருவாக்கப்பட்டது.

Premium Ads